Tuesday, December 23, 2008

பாலுமகேந்திராவிடமிருந்து ஒரு கடிதம்...

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...
தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா

10 comments:

நாமக்கல் சிபி said...

ஆஹா!

பாலுமகேந்திரா போன்ற ஒரு நல்ல கலைத்தாகம் கொண்ட படைப்பாளியிடமிருந்து பாராட்டு!

வாழ்த்துக்கள்!

Venkatesh said...

வாழ்த்துகள் கல்யான்!!

வெங்கடேஷ்

பாலு மணிமாறன் said...

Thats great!

If he says it, then sure you should deserve it. Hope you can provide that story in your blog.

Regards

SurveySan said...

வாழ்த்துக்கள்!


கதைக்கான சுட்டி எங்கங்க?

M.Rishan Shareef said...

வாழ்த்துக்கள் கல்யாண்குமார் !

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் நண்பரே

அந்தக் கதை எப்போது வந்தது? அதன் நகலை மீண்டும் வலைப்பதிவில் இடலாமே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது மோதிரக்கையால் முதுகில் தட்டியதல்ல-அதுக்கும் மேல்; பாலு மகேந்திரா- வைரமோதிரக்கை..
பாராட்டுக்கள்.
நன்றி - இயக்குனர் பாலு மகேந்திரா...சிறப்பைத் தேடிப் பாராட்டியதற்கு
அந்த விகடன் திகதியைக் குறிப்பிடவும்

goma said...

கடிதம் எழுதுவதை என் ஆரோக்கியமான ஹாபியாகக் கொண்டிருந்த காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது உங்கள் சிறுகதை.ஆழமான கருத்தை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கடிதத்தை நேசித்த உங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலி.
ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளவரையும் அருகே நிறுத்திவைக்கும் அற்புதமான ஒரு மந்திரக் கோல் இந்த கடிதக்கலை.இன்று அது 10 விழுக்காடுக்குள் விழுந்த விட்டது,என்று அறியும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது.

goma said...

சில சமயம் அடி மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் சில நல்ல நினைவுகளை மெல்ல வருடி எழுப்புவது போல் ஒரு சில பதிவுகள் அமையும் .சென்ற ,புயலுக்குப் பெண் பெயர் ஏன் என்ற பதிவு என்னை உசுப்பி விட்டதென்றால், இப்பதிவு "உன்னிடம் ஆழ்ந்து கிடக்கும் அழகான அனுபவத்தை அனைவருடன் பகிர்ந்து கொள்" என்று அன்போடு ஆணையிட்டது
அடுத்த பதிவு 'கடிதமும் நானும்' கூடிய விரைவில்

manjoorraja said...

அன்பு கல்யாண்

மோதிரக்கையால் குட்டுப்பட்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

கதையை முடிந்தால் அனுப்பிவைக்கவும்.

நன்றி.