Saturday, March 29, 2008



இன்றைய பல்லவி:


ஆகாயக் காற்றலையில்


ஆயிரமாய் பாடல்கள்!


உன் பாடல் எதுவென்று


என் நெஞ்சம் அறியுமடி!

Friday, March 21, 2008

என்னைப்பற்றி சில வரிகள்,,,

வணக்கம் நண்பர்களே!
நான் கல்யாண்குமார். திசைகளில் தொடங்கிய எனது எழுத்து இன்றும் தொடர்கிறது. நன்றி திரு மாலன். அடுத்தது தாய். பின்னர் இயக்குனர் மனிவண்னனிடம் உதவி இயக்குனராக பத்து படங்கள். கே.ரங்கராஜிடம் ஆறு படங்கள். அடுத்து பத்திரிக்கையாளராக அவதாரம். இந்திய டுடே தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக ஆறு வருடங்கள் ஓடிப்போயின. தற்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைக்கதை விவாதக் குழுவில் இருக்கிறேன். (தசாவதாரம் எப்போது என்கிற கேள்விக்கு விடை: மே மாதம் உறுதி! காரணம் படத்தின் கம்யுட்டர் கிராபிக்ஸ் வேலைகள் தொடர்கின்றன.)
மதுமிதாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்த வலைப்பூ பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். நன்றி தோழி.
இந்த இரண்டாயிரத்து எட்டு மார்ச் மாத இருபத்தி ஒன்றாம் மாலை நேரத்தில் தொடங்குகிறது எனது இந்த வலைப்பூ.
சொல்ல மறந்து விட்டேனே, இரண்டு தமிழ் படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். ஒன்று கார்த்திக் நடித்த 'இன்று' அடுத்தது விக்ரமனின் சென்னை காதல். ஒரு கவிதை தொகுதி வந்திருக்கிறது. சில பல்லவிகளும் சில சரணங்களும் என்ற அந்த தொகுப்பை கமல் வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார் சில மாதங்களுக்கு முன்பு.
அதிலிருந்து ஒரு கவிதையை அமரர் சுஜாதா அவர்கள் விகடனில் எனக்கு பிடித்த கவிதை என்று எடுத்துப் போட்டிருந்தார். அதை சொல்லவா?
வீடியோ
பஸ்

படத்தின் முடிவு தெரியுமுன்னே
முடிந்து விடுகிறது
பயணம்!
-----------------------------------------------------------