Monday, November 3, 2008

எண்கணித வாழ்க்கை!


எண்களோடு
இணைக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை!
பிறந்தவுடன் கழுத்தில் கட்டப்படுகிறது,
சிலருக்கு எண்களோடு கூடிய அட்டைகள்!
பலருக்கும் குறித்துவைக்கப்படுகிறது
பிறந்த நேரமும் தேதியும்!
மூன்று சக்கர நடைவண்டி;
இரண்டு சக்கர வாகனமாகிறது!
சிலருக்கு நான்கு சக்கரங்கள்
சொந்தமாகிறது!
வசிக்கும் வீட்டுக்கும்
வழங்கப்படுகிறது ஒரு எண்!
பள்ளித்தேர்விற்கு வழங்கப்படுகிற
எண்கள் பலவகையில் தொடர்கிறது!
குற்றம் செய்தவனுக்கும்
கொடுக்கப்படுகிறது தனி எண்!
வீட்டுத் தொலைபேசி இன்று
பாட்டுத் தொகுப்போடு பாக்கெட்டில்!
அவரவர் பெயருக்குப் பின்னாலும்
பத்து இலக்க எண்கள்
பதிக்கப்பட்டிருக்கிறது,
காற்றின் அலைவரிசையில்!
எண்களோடு
இணைக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை!

8 comments:

Anonymous said...

உண்மையை அப்படியே அழகாக எழுதியுள்ளீர்கள் :)

manjoorraja said...

நல்லதொரு நிதர்சனமான கவிதை. நடப்பு நிலையை அழகாக சுட்டியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

geevanathy said...

இறதியில் ஆறு{அடி} என்ற எண்ணுக்குள் அடங்கிப்போய் விடுகிறது வாழ்க்கை... அருமையான கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே...

சாந்தி நேசக்கரம் said...

"காற்றின் அலைவரிசையில்!
எண்களோடு
இணைக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை!"

எண்களோடும் எண்ணங்களூடும் வாழ்வு பதியமிடப்படும் உண்மையை எண்களோடு தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
-சாந்தி-

நட்புடன் ஜமால் said...

//இறதியில் ஆறு{அடி} என்ற எண்ணுக்குள் அடங்கிப்போய் விடுகிறது வாழ்க்கை... அருமையான கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே...//

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய் ....

ஷைலஜா said...

எண்கணித வாழ்க்கை பற்றி
எண்ணி எழுதிய கவிதையை
எண்ணி எண்ணிப்பார்த்துப்படித்து
எண்ணம் என்னுடையதை ஓர்வரியில் சொல்வேன்!

அற்புதம்!

goma said...

எண்ணி எண்ணிப் பார்த்தாலும் எண் இல்லாத மனித வாழ்க்கையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை

அமிர்தவர்ஷினி அம்மா said...

எண்களோடு
இணைக்கப்பட்டிருக்கிறது
வாழ்க்கை!

ஆரம்பித்த விதத்தோடே அதை முடித்த விதமும் அழகு..