Friday, April 25, 2008

தசாவதாரம் ஆடியோ வெளியீடு ஹைலைட்ஸ் !


இன்று மாலை நடந்த ஆடியோ வெளியீட்டில் நடந்த சுவராஷ்யமான சில விஷயங்கள்:


*முதல்வர் கருணாநிதி பேசுகையில் ஜாக்கி ஷானின் பிறந்த நாள், அவரது பெற்றோர்கள், வளர்த்தவர்கள் ஆகியோரைப் பற்றி குறிப்பிட்டு பேசியதை கே.எஸ்.ரவிகுமார் மொழி பெயர்த்து சொன்னதும் ஆடிப்போய் விட்டார், ஜாக்கி.

' எங்கிருந்து இத்தனை தகவல்களையும் திரட்டினார் இவர்?' என்று ஆச்சர்யம் அவரது முகத்தில்.


*அடுத்து கமலோடு ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஜாக்கி சொன்னதை கமல் பிடித்துக்கொண்டு, வார்த்தை தவறக் கூடாது என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.


* ஜாக்கி பேசுவதற்கு முன்னரே, '' யார் பெயரையும் தப்பாக உச்சரித்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் '' என்று கேட்டுக் கொண்டார். அதன்படி தப்பாகவே முதல்வர் பெயர் உட்பட சில பெயர்களை உச்சரித்து கைதட்டலை பெற்றுக் கொண்டார்.


* ஜாக்கி உட்பட மம்மூட்டி., மல்லிகா ஷெராவத், அமிதாப் விஜய் என்று அரங்கமே ஜோராக இருந்தது. மல்லிகா மூலம்தான் ஜாக்கி இங்கு வந்தார் என்பது கூடுதல் தகவல். இருவரும் சேர்ந்து மித் என்ற படத்தில் நடித்தார்கள் என்பது பழைய செய்தி.


*போதுமா இன்னும் வேணுமா?



4 comments:

சிவசுப்பிரமணியன் said...

நான் சரியாக இந்தநிகழ்ச்சியை பார்க்கவில்லை கல்யாண்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. உங்கள் இயக்குனரிடம் இந்த கமல் ரசிகனின் வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள்...

முரளிகண்ணன் said...

need more. because you are a assistant director of KSR. give more insight about the function and film

Tech Shankar said...

super info.. from superior person..

Anonymous said...

Universal Hero Thalaivar Kamal Hassan Vaazhga!