Tuesday, August 18, 2009

’’எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்..’’

அப்போது நான் ’தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.
எதிர்முனையிலிருந்து ஒரு குரல் –
’’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்...ஆசிரியர் இருக்கிறாரா?’’
அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னேன்.
’’ இன்னும் வரலை சார்....’’
’’ நீங்க யார் பேசறது?’’
‘’ நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்’’
’’சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,
’’ ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..’’ என்றேன்.
‘’இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.’’ என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.
ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!
சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.
விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.
முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.
‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’
அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
‘’ நீங்க யார் பேசறது?’’
‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’
‘’உங்க பேரு என்ன?’’
’’லச்சுமி’’
‘’எந்த ஊரு?’’
’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’
’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’
’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’
‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’
’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’
’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’
‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’
’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’
‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’
’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’
’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’
‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’
‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’
‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’
‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’
’’மறுபடி சொல்லுங்க....’’
‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!
---------------------

19 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிகச் சுவாரசியமான கேள்விப்படாத செய்தி,
அவரிடம் மனிதாபிமானம் மிகுதியாக உண்டு.

கே.ரவிஷங்கர் said...

எம்.ஜி.யார் ஒரு சகாப்தம்.ஒரு முறை
அவர் தேர்தல் பிரசாரத்திற்காக (1965?67?) குரோம்பேட்டை வந்திருந்தார்.கூட்டம் அம்மியது. அப்போது ஒரு வீட்டில் ஆரத்தி எடுத்தார்கள்.அவரையே பார்த்துக்கொண்டிருந்த என்னை(வயது 6)கன்னத்தில் கிள்ளி “நல்ல படிக்கனும்”
என்று சொன்னார்.

இப்போது நினைத்தால் சிலிர்க்கும்.

வர்மா said...

அதுதான் எம்.ஜி.ஆர். புதியதகவல் நன்றி
அன்புடன்
வர்மா

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சுவாரசியமான பகுதி, தொடரட்டும் உங்கள் பணி

goma said...

அந்த நாட்களில் பெரும் தலைவர்களிடம் நாம் கண்டு வந்த அடக்கமும் எளிமையும் இன்று யாரிடமும் இல்லாதது பெரிய குறைதான்

goma said...

நல்ல தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இது போல் அடிக்கடி எழுதி வாருங்கள்.

ASK MOVIES said...

mika pala visayangal kalyanji yidam undu

athil ithu oru muththu
innum maalai korkkum alavukku suvaiyaana thagavalgal

kalyanji yidam!

தமிழரசி said...

தலைவர் ஏழைகள் மேல் கொண்டிருந்த பற்றை மேலும் பறைச்சான்றும் சம்பவம் புதைந்து போயிருக்க கூடும் இந்த நிகழ்வு புது வாழ்வு தந்திட்டீர் நீங்கள்....

துபாய் ராஜா said...

எல்லோருக்கும் இனிய,எளிய தலைவர் திரு.எம்.ஜி.ஆர்.சிறுவயதில் பலமுறை அவரை அருகில் சந்தித்திருக்கிறேன்.

அவரது ஈடில்லா எலுமிச்சை நிறமும், அன்பான வசீகரப்புன்னகையும், ஏழை, எளியோரிடம் கொண்ட பாசமும் பார்த்த,பழகிய எவராலும் மறக்கமுடியாதவை.

நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனது மாமா கூட அவரைப் பற்றி கதை கதையாய் சொல்லியிருக்கிறார்.

இது மிகவும் வியப்பளிக்கும் செய்தியாக இருக்கிறது

பகிர்வுக்கு நன்றி.

அப்பு சிவா said...

இன்னும் கொஞ்ச காலத்துக்கு மொத பொறந்து வலம்புரி ஐயா வீட்ல வேலை பாத்திருக்கலாம். புரட்சி தலைவர்கிட்ட பேசுறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்!

santhana said...

இதை போன்ற மனிதர்களை இனி எங்கே பார்க்கப் போகிறோம், மனிதம் அழிந்து கொண்டே இருக்கிறது.

இனியாள் said...

நல்ல சுவாரஸ்யமான விஷயம் தோழர்.

selvi said...

மனிதாபிமானம் காணாமல் போய் விட்ட இந்நாளில் எம்.ஜி.ஆர்.
குறித்த இந்த செய்தி மனதிற்கு சந்தோஷம் அளிக்கிறது. அவர் மறைந்தும் வாழ்வது இது போன்ற செயல்களினால்தான்.

MKP,Singapore said...

Idhay deivam,avarudya peechu moochu ellam eppothume nalintha ,vasi kurivaanavarkalukku uthava veendum endra ennam thaan...
andha ennathil entha kallam illatha ,thanamal illa the uthavigal seithathaal thaan ithani varudangal aanulum avar pugal mariyaamal mangaamal irupatharkku kaaranam.. thalivar thailvarthaan..

Unknown said...

எம்.ஜி.அர். மதுரை மேற்குத்தொகுதியில் சட்டசபைத்தேர்தலில் நின்றார். நான் அப்போது மதுரைக்கல்லூரியில் முதலமாண்டு இளங்கலை சமூகவியல் படித்துக் கொண்டிருந்தேன். தேர்தல் பிரச்சாரத்திற்க்காக அவர் எங்கள் வீடு வாசல் வழியாகச் சென்றார். அது ஒரு குறுகலான சாலை(புதூர் வண்டிப்பாதை என்று பெயர்). பிரச்சார வேனில் நின்று கொண்டு வந்தார். அவர் எல்லோருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டு வந்த போது நான் மட்டும், அவர் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் கையை “உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்” - என்று பாடிக் கொண்டு வருவாரே, அதே மாதிரி கையை அசைத்தேன். வண்டியை நிறுத்தியவுடன் ‘சந்தோஷத்தில்’ குதித்தவாறே, அவர் அருகே சென்றேன், பெயர் கேட்டார்,(பெயரை சொன்னபோது சந்தேகத்தோடு மீண்டும் மீண்டும் கேட்டார் - இருங்கோவேள் என்ற பெயரை பலரும் தவறாக இளங்கோவேள் என்றே சொல்வதை சொன்னவுடன் - சிரித்தார்) என்ன செய்கிறேன் என்று கேட்டார், நன்றாகப் படி என்றார். முதல் முறையாக ஓட்டு போடப் போகிறேன் என்றேன். யாருக்கு போடப் போகிறாய்? - என்றார் ”உங்களுக்குத்தான்” என்றேன். சிரித்துக் கொண்டேமுதுகை தட்டிக் கொடுத்தார். அத்தனை சந்தோஷமாக ஆட்டம் போட்டேன். ஒரே நாளில் ஹீரோவாகி விட்டேன்.

- ஒரு சிறந்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சந்தேகமே இல்லை.

இன்னொரு சம்பவம், மதுரையில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. நான், மதுரைக்கல்லூரி மாணவனாக என்.எஸ்.எஸ். வாலண்ட்டியராக சேவை செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மதுரைக்கல்லூரி கிரவுண்டில் தினசரி நாடகங்கள் நடை பெற்றது. நாங்கள் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை யுனிஃபார்ம் அணிந்து கல்லூரி என்.எஸ்.எஸ். பேட்ஜ் அணிந்து கூட்டத்தை சரியாக அமரச் செய்து, வி.ஐ.பி பகுதியில் சர்வீஸ் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று முதல்வர் வருகிறார் என்று காவல்துறையினர் இரகசியமாக செய்தி சொன்னார்கள். ஒரு கணம் பயமாக இருந்தாலும், சந்தோஷமாக கூட்டத்தை சரி செய்து அவர் உட்காருவதற்க்காக பிரின்சிபாலின் நாற்காலியை கொண்டு வந்து தயாராக காத்திருந்தோம். அந்த நாற்காலிக்கு பொறுப்பு நான் என்பது போல பந்த பண்ணிக் கொண்டு காத்திருந்தேன். திரு எம்.ஜி.ஆர். வந்தார், நாற்காலியில் அமரச் சொன்னேன்.சிரித்தவாரே,’பின்னால் உள்ளவர்களுக்கு மறைக்கும் தரையிலேயே உட்கார்ந்து கொள்கிறேன் என்று’ தரையில் (மணல் தரையில்) அமர்ந்து கொண்டே நாடகம் முடியும் வரை பார்த்தார். அவர் அருகே மிகுந்த பெருமையோடு நானும் பார்த்தேன். மேஜர் சுந்தரராஜன் நடித்த ”கல்தூண்” நாடகம். நாடகம் முடிந்த பிறகு மேஜர் சுந்தரராஜனுக்கு சால்வை போர்த்தி பாராட்டி பேசிவிட்டு சென்றார்.

மதுரையில் அதற்க்கு பிறகு அப்படி ஒரு திருவிழா நடை பெறவே இல்லை. (அடாவடி விழாக்களையெல்லாம் சேர்த்துக் கொள்ளாதீர்கள்).