Friday, July 24, 2009

கடவுளின் செல்போன் அழைப்பு!


அதிகாலை நேரம்
அரைத் தூக்கத்தில்
சிணுங்கியது செல்போன்...

பேசுவது யாரெனப்
பார்க்க விருப்பமின்றி
எடுத்துக் காதில் வைத்தேன்.

’’ஹலோ, யாரு?’’ என்றேன்

எதிர்முனையில் ஒரு புதுக்குரல்!

’‘கடவுள் பேசுகிறேன்’’
என்று பதில் வந்த்து.

’’என்னது, கடவுளா?’’

’’ஆமாம், கடவுள்தான் பேசுகிறேன்”

குழப்பத்தோடு
எண்களைப் பார்த்தேன்
0000000000
என்று அனைத்தும் பூஜ்யமாக
பத்து இலக்கங்கள்!
இது எந்த செல்போன்
நிறுவனத்தின் எண்கள்?

தூக்கம் கலைந்தது...

’’சரி இப்ப உங்களுக்கு
என்ன வேண்டும்?’’

’’ எனக்கு எதுவும் வேண்டாம்.
அவசரமாக ஒரு
நல்ல சேதியைச் சொல்லவே
உன்னை அழைத்தேன்’’

’’சொல்லுங்கள்’’

’’நீ மறுபடி பிறக்கப் போகிறாய்’’

’’என்னது?’’

எனக்குள் மேலும் குழப்பம்.

’’மறுபடி பிறக்க வேண்டுமெனில் நான்
மரணித்திருக்க வேண்டுமே?’’

‘’அதைச் சொல்லவே இந்த அழைப்பு!’’

‘’என்னது?’’

‘’ நீ இறந்து விட்டாய்’’

’’இல்லையே, உங்களோடு
பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்?’’

‘’இனி என்னோடு மட்டும்தான் நீ
பேசிக் கொண்டிருக்கப் போகிறாய்’’

அடக்கடவுளே,
இது என்ன கொடுமை?

’’எப்போது நான் இறந்தேன்?’’

’’சில நொடிகளுக்கு முன்னால்தான்’’

’’எழுபது வயதுவரை ஆயுள் என்று
என் ஜாகதம் கணிக்கப்பட்டிருந்ததே?
இப்போது நாற்பதுதானே ஆகிறது?’’

’’ அது என்னால் கணிக்கப்படவில்லையே!’’

’’அதுசரி, ஒருபாவமும் செய்யாமல்
எப்படி நிகழ்ந்தது என் மரணம்?
பாவத்தின் சம்பளம்தானே மரணம்?’’

’’அந்த வாசகத்தையும் நான் எழுதவில்லையே!’’

‘’சரி நான் மறுபடி
எங்கே, எப்போது, யாராய்
பிறக்கப் போகிறேன்?’’

’’அதுவும் இன்னும்
முடிவு செய்யப்படவில்லை.’’

’’ பிறகு?’’

‘’காத்திருப்போர் பட்டியலில்
உன் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது’’

’’அதுவரை நான் என்ன செய்வது?’’

‘’என்னோடு பேசிக் கொண்டிரு’’

’’உங்களுக்கு அவ்வளவு நேரமிருக்கிறதா?’’

‘’ நேரமிருக்கும்போது பேசுகிறேன்’’

’’எனக்குப் பேசவேண்டுமென தோன்றினால்?’’

’’ஒரு மிஸ்டு கால் கொடு,
நான் அழைப்பேன்.
இப்போது விடைபெறுகிறேன்’’

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதிகாலைக் குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது எனக்கு.

தூக்கம் முற்றிலும் கலைய
என் அறையை சுற்றுமுற்றும் பார்க்கிறேன்.

அது கனவும் இல்லை;
கடவுள் சொன்னது போல நான்
சாகவும் இல்லை.

பிறகு எங்கிருந்து அந்த அழைப்பு?
பேசியது யார்?

திரும்ப அதே 0000000000
எண்ணுக்கு நானே
ரீ டயல் செய்தேன்!

’ப்ளீஸ் செக் த நம்பர்’
என்று பதில் வருமென
எதிர்பார்த்தேன்.

ஆனால் -

’பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்’
என்ற பாடல்
காலர் ட்யூனாகக் கேட்டது!
--------------------

21 comments:

யூர்கன் க்ருகியர் said...

:)

சகாதேவன் said...

பூஜ்ஜியதுக்குள்ளே....இந்த பாட்டுக்கு அருமையான நினைவூட்டல்.

PPattian : புபட்டியன் said...

அட்டகாசம். ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கலாம் இதற்கு... வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

அப்புறம்????

நர்சிம் said...

மிக அருமை.

தராசு said...

அற்புதம்

sury said...

எனக்கு வரவேண்டிய கால் நம்பர் மர்றிப்போய் உங்களுக்கு வந்திருக்கலாமோ ?
எனக்கு 68 வயதாகிவிட்டதே ! நானும் எப்போது எனக்கு அப்படி ஒரு கால் வரும் வரும் என‌
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இருந்தாலும், நீங்கள் கால் த‌னக்கில்லை என்று தீர்மானித்து அதை எனக்கு கால் ஃபார்வேர்டு செய்திருக்கலாம்.
பரவாயில்லை. எனது செல் எண் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நிற்க.
இது போன்ற பதிவுகள் தமிழ் வலை உலகில் பெரிதும் காணப்படுவதில்லை.
நகைச்சுவையுடன் சிந்திக்கவும் வைத்தது .

ரசித்தேன். படித்தேன். சிரித்தேன்.

முதியவனின் (68)
வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

cheena (சீனா) said...

ந்ல்ல நகைச்சுவை


ரசித்தென்

goma said...

வாசிப்பவர் அனைவரையும் தத்தம் மனௌளைச்சலுக்கும்,அனுபவத்துக்கும் ,அடிபட்டதற்கும் ஏற்றவாறு அர்த்தம் செய்து கொள்ள வைக்கும் அற்புதமான மாடர்ன் கவிதை
வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

நல்ல கற்பனை

rahini said...

கடவுளிடம் என் செல் போன் நம்பரையும் கொடுங்கள்
சேட்டும்
வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துக்களும் என் நன்றியும்

அன்புடன் கவிதைக்குயில்
வானொலி வாரிசு
p.ராகினி

அமிர்தவர்ஷினி அம்மா said...

யோசிக்க தூண்டும் கவிதை

வேந்தன் said...

அருமை :)))

babu said...

mmm view many way one

கிறுக்கன் said...

நகைசுவை?

baskar said...

Kadavul ennidam sonnal....
naan solluven???

Indru oru naal mattum Naan en Kudumpathirkaka Ennal ennavellam seiya mudiyumo seithu vidukiren....
Naan iravu thungum pothu ennai unnidam allaithu sel endru!

baskar said...

Endravathu irapom endru theriyum annal kadavul sonnal Santhosamaga thane Ettrukolla vendum

அப்பு சிவா said...

நல்ல கற்பனை. இந்த 0000000000 நம்பரை டயல் செய்து பார்த்தாலென்ன? யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இனியாள் said...

வித்தியாசமாய் முடிந்திருகிறது கவிதை, நல்ல கற்பனை.

விக்னேஷ்வரி said...

வாவ், அருமை.

sophia vijay said...

I really enjoyed this kavithai with creative thinking