Sunday, July 19, 2009

முதல் வணக்கம்.....


வலைத்தளங்களின் தனக்கென ஒரு தனிச்சிறப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ’தமிழ்மணம்’ நிர்வாகத்திலிருந்து ’ஒரு வாரத்திற்கு நட்சத்திரமாக இருக்க முடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நான் அடிக்கடி பதிவுகளை இடுபவனும் அல்ல; பரபரப்பான செய்திகளை இடுபவனும் அல்ல! திரைத்துறையில் பணிபுரிவதால் நேரம் அமையும் போது எனது எண்ணங்களை பதிய வைக்கிறேன். அப்படியிருந்தும் தமிழ் மணத்தின் அழைப்பை என் எழுத்துக்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் கருதுகிறேன். அந்த அழைப்பிற்கு எனது முதல் வணக்கம்...

சில மாதங்களுக்கு முன் எனது வலைப்பக்கத்தில் ‘காற்றில் பவனிவரும் கணினித் தமிழ்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். (http://kalyanje.blogspot.com/2008_05_01_archive.html ) அதைப் படித்துவிட்டு திருமிகு நா. கணேசன் அய்யா அவர்கள் பாராட்டி ஒரு பதில் எழுதியிருந்தார்கள். அதே கட்டுரையை பின்னர் அமெரிக்காவில் தமிழர் அமைப்பை நடத்தும் ‘feTNA’ ஆண்டு மலரில் பிரசுரித்து என்னை கெளரவப்படுத்திருந்தனர்.
அந்தக் கட்டுரையை பாராட்டியதோடு நில்லாமல் எனக்கு, தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவராக அழைப்பு வர காரணமாகவும் இருந்திருப்பவர் திருமிகு நா. கணேசன் அய்யா அவர்கள்தான் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். அவருக்கும் எனது அன்பான வணக்கம்.
இதோ அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று உங்கள் முன்னால் நிற்கிறேன். இனி எனது எண்ணங்களை இந்த ஒரு வார காலம் இனிதாய் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். இதில் சில நண்பர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் எனக்கு சந்தோஷம்! ’நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்தான்’ என்கிற புதுமொழிப்படி அவர்களை நீங்களும் உங்களின் நண்பர்களாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்....
பதிவுகளில் சந்திப்போம்!

19 comments:

துளசி கோபால் said...

ஆஹா..... நட்சத்திரமா?

சினிமாக்காரர்கள் ஜொலிப்புக்குக் கேக்கணுமா?:-))))

இனிய வாழ்த்து(க்)கள் கல்யாண்ஜி

பிரியமுடன்.........வசந்த் said...

நட்ச்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் சார்.......

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் நண்பரே

உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து ரசிக்கும் என் போன்றவர்களுக்கு உங்கள் நட்சத்திர வாரப்படையல் இனிதாய் அமையட்டும்.

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! நண்பரே!

த.ஜீவராஜ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே....

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே இனிய வாழ்த்துகள்.

நட்சத்திரங்கள் உலாவும் உலகிலிருந்து ஒரு நட்சத்திரம் இந்த வார தமிழ்மணத்தில் ஜொலிப்பதற்கு வாழ்த்துகள்.

முகவைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் கல்யான்ஜி,

இன்று காலை உங்கள் எஸ்.எம்.எஸ் பார்த்தபோது அதில் தமிழ்மணம் காண சொல்லியிருந்தீர்கள். ஆனால் அந்த சமயம் நான் முகவை நீதிமன்ற வளாகத்தில் இருந்ததால் இயலவில்லை. விட்டிற்கு திரும்பியதும் முதலில் தமிழ்மணம் திற்நது சினிமா பகுதிக்கு சென்று பார்த்தேன் எதுவும் இல்லை மீண்டும் சற்று நேர சிந்தனைக்கு பிறகுதான் நீங்களும் நானும் சென்றமுறை சந்தித்தபோது தமிழ்மணம் நட்சத்திர பதிவர் குறித்து கூறியிரந்தது நினைவுக்கு வந்தது அதன் பின்னர்தான் தமிழ்மணத்தின் முகப்பில் உங்கள் புகைப்படம் இடம்பெற்றிருந்தததை கண்டேன்.

வாழ்த்துக்கள்.....புதிதாக எழுதிக்கொண்டிருந்த பாடல்களுக்கு மத்தியிலும் எவ்வாறு இங்கு எழுதப்போகிறீர்களோ? இருந்தபோதிலும் நீங்கள் இங்கு ஜொலிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நன்றி
முகவைத்தமிழன்

சந்தனமுல்லை said...

நட்சத்திர வாழ்த்துகள் !!

இளைய பல்லவன் said...

வாழ்த்துக்கள் கல்யாண்ஜி!

திரைத்துறை பின்னணியுடைய உங்கள் நட்சத்திர வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

துபாய் ராஜா said...

இந்த வார நட்சத்திரத்திற்கு இனிய வாழ்த்துக்கள்.

Anonymous said...

உண்மையில் ஒரு நட்சத்திரம் தான்... :)

வாழ்த்துகள் கல்யாண்

சகாதேவன் said...

ரவிகுமார் மாதிரி க்ளைமாக்ஸில் திரையில் தோன்றி அதிலும் நட்சத்திரம் ஆகுங்கள்.
வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நிறைய எழுதுங்க சார்.

இந்த நட்சத்திர வாரத்துலயாவது உங்களுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு கிட்டட்டும் எங்களுக்கு.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள்

ஷைலஜா said...

திரை உலகின் நிலா இன்று தமிழ்மணத்தில் நட்சத்திரம்! இரண்டுமே அழகுதானே! வாழ்த்துகள் கல்யாண்ஜி!

SP.VR. SUBBIAH said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

தமிழ்நெஞ்சம் said...

Congrats for Tamilmanam Star

goma said...

தம்பி கல்யாண்ஜிக்கு வாழ்த்துக்கள்.