'குழந்தைத் தொழிலாளர்களை
இங்கு வேலைக்கு அமர்த்துவதில்லை'
- எழுதிவைத்த போர்டை
எடுத்து வைத்தான்
எட்டு வயது சிறுவன்!
-----------
மனிதர்களோடு மனிதர்கள்
எடுத்துக் கொண்ட புகைப்படங்களை
சக மனிதர்களிடம் காட்டி
சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள்
மனிதர்கள்!
-----------
ஆளில்லா ரயில்பெட்டி
குருட்டுப் பிச்சைக்காரனின்
கை ஏந்தல்!
------------
தினந்தோறும்
தெருவோரம்
கயிற்றில் நடக்கும் சிறுமியின்
லட்சியம்தான்
என்னவாக இருக்கும்?
--------------
10 comments:
ரயில் பெட்டி கவிதை ஹைக்கூ போல அருமையாக இருக்கின்றது வாழ்த்துகள் கல்யாண்ஜி
//தினந்தோறும்
தெருவோரம்
கயிற்றில் நடக்கும் சிறுமியின்
லட்சியம்தான்
என்னவாக இருக்கும்?//
உணவு !
வலைப்பதிவு நன்று. தடம் பதிக்க வாழ்த்துகள்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
தங்கள் வலைத்தளம் கண்டேன். ரயில் பெட்டி கவிதை கவர்ந்தது. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
தங்கள் பாராட்டுக்கு நன்றி. தங்கள் வலைத்தளம் கண்டேன். ரயில் பெட்டி கவிதை கவர்ந்தது. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
முதல் கவிதை-நெஞ்சைச் சுடும் நிஜம்!
மூன்றாவது-மனதைப் பிசையும் சோகம்!
கவிதை வரிகள் மனதை ஏதோ செய்கின்றன.
ஒரு ஜான் வயுத்தையும் படைத்தது .. எழையவும் படைத்தவனை தேடி சட்டையை பிடித்து நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேக்கத்தான் ... கவி சிறிதானாலும் காரம் அருமை ... வாழ்த்துக்கள்
//ஆளில்லா ரயில்பெட்டி
குருட்டுப் பிச்சைக்காரனின்
கை ஏந்தல்!//
ultimate
-priyamudan
sEral
அருமை... முதல் கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
Post a Comment