Sunday, April 27, 2008

பர்த்ருஹரியின் சுபாஷிதம் - தமிழில் மதுமிதா

டக்கே வாழ்ந்த மகாகவி பர்த்ருஹரி. தமிழில் காவியங்கள் படைத்த பலரின் பலத்தோடு இருக்கிறது இவரது படைப்புகள். சமஸ்க்ருதத்தில் வந்த இவரது முன்னூறு கவிதைகளை அழகு தமிழில் அற்புதமாக வடித்திருக்கிறார் மதுமிதா. ஒரு புத்தகத்தை படித்து முடித்த பின் வேறு எந்த புத்தகத்தையும் படிக்க சில மாதங்களுக்கு மனசு ஒப்பாது. அந்த வகையில் சேருகிறது சுபாஷிதம்.
கனமான விஷயங்கள் எளிய தமிழில் நம்மை பாதித்து பதிந்து விடுகிறது. நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்று திருக்குறளைப் போல மூன்று பகுதிகளாக உள்ள இதில் பல கவிதைகள் மனசை அள்ளுகின்றன.

நன்னடத்தையால்
தந்தையை மகிழ்விப்பவனே
மகன்!

கணவனின்
நலம் விரும்புபவளே
மனைவி!

ஆபத்திலும் சுகத்திலும்
ஒரே மாதிரியான
நட்புடன் இருப்பவனே
நண்பன்!
இம்மூவரையும் இவ்வுலகில்
புண்ணியம் செய்தவர்களே
பெறுகிறார்கள்!

என்று நீதி சாதகத்தில் ஒரு கவிதையிலும்

முதலில் வேண்டாமென விலகியும்
பின்
தோன்றிய விருப்பினால்
நாணத்துடன் நழுவியும்
பின்பு
தைரியமாய்
பிறகு
காதலுடன் அச்சமில்லாமல் ஆர்வமாக ஈடுபட
காதல் விளையாட்டில்
இரண்டறக் கலந்து
இன்பம் துய்ப்பது

குலப்பெண்ணிற்கு உரியது!

என்று சிருங்கார சதகத்திலும்

பிரம்மாண்ட உலகம்
குழப்பாது
யோகியை!
சிறு மீனின் துள்ளலால்
கலங்காது கடல்.

என்று வைராக்கிய சதகத்திலும் - மூன்றே மூன்று கவிதைகளில் அவரின் தனித்தன்மை தெளிவாகிறது அல்லவா?

வெளியீடு சந்தியா பதிப்பகம் சென்னை.


3 comments:

மதுமிதா said...

உதயம் வலைப்பதிவுக்கு என்னுடைய பதிவில் அறிமுகம் கொடுத்தால் இங்கே பர்த்ருஹரியை இன்றைக்குப் போட்டுவிட்டீர்களே கல்யாண்குமார்ஜி.

சுயவிள‌ம்பரம் கொடுத்த பழிக்கு ஆளாக்கிவிட்டீங்களே என்னை. எப்படி சரி பண்ணறது? இது நியாயமா?

மதுமிதா said...

சரி இருக்கட்டும். பதிவிற்கு நன்றி.

சிவசுப்பிரமணியன் said...

//பிரம்மாண்ட உலகம்
குழப்பாது
யோகியை!
சிறு மீனின் துள்ளலால்
கலங்காது கடல். //

மிகவும் அருமையான கண்ணோட்டம் நிறைந்த கவிதையை தந்துள்ளீர்கள்