Friday, March 21, 2008

என்னைப்பற்றி சில வரிகள்,,,

வணக்கம் நண்பர்களே!
நான் கல்யாண்குமார். திசைகளில் தொடங்கிய எனது எழுத்து இன்றும் தொடர்கிறது. நன்றி திரு மாலன். அடுத்தது தாய். பின்னர் இயக்குனர் மனிவண்னனிடம் உதவி இயக்குனராக பத்து படங்கள். கே.ரங்கராஜிடம் ஆறு படங்கள். அடுத்து பத்திரிக்கையாளராக அவதாரம். இந்திய டுடே தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக ஆறு வருடங்கள் ஓடிப்போயின. தற்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைக்கதை விவாதக் குழுவில் இருக்கிறேன். (தசாவதாரம் எப்போது என்கிற கேள்விக்கு விடை: மே மாதம் உறுதி! காரணம் படத்தின் கம்யுட்டர் கிராபிக்ஸ் வேலைகள் தொடர்கின்றன.)
மதுமிதாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்த வலைப்பூ பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். நன்றி தோழி.
இந்த இரண்டாயிரத்து எட்டு மார்ச் மாத இருபத்தி ஒன்றாம் மாலை நேரத்தில் தொடங்குகிறது எனது இந்த வலைப்பூ.
சொல்ல மறந்து விட்டேனே, இரண்டு தமிழ் படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறேன். ஒன்று கார்த்திக் நடித்த 'இன்று' அடுத்தது விக்ரமனின் சென்னை காதல். ஒரு கவிதை தொகுதி வந்திருக்கிறது. சில பல்லவிகளும் சில சரணங்களும் என்ற அந்த தொகுப்பை கமல் வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார் சில மாதங்களுக்கு முன்பு.
அதிலிருந்து ஒரு கவிதையை அமரர் சுஜாதா அவர்கள் விகடனில் எனக்கு பிடித்த கவிதை என்று எடுத்துப் போட்டிருந்தார். அதை சொல்லவா?
வீடியோ
பஸ்

படத்தின் முடிவு தெரியுமுன்னே
முடிந்து விடுகிறது
பயணம்!
-----------------------------------------------------------

7 comments:

மதுமிதா said...

வலையுலகுக்கு நல்வரவு கல்யாண்குமார்ஜி. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

கல்யாண்குமார் said...
This comment has been removed by the author.
கல்யாண்குமார் said...

thank u very much madhumitha...

Unknown said...

hi kalyanje, ur writintgs are simply awesome, ur kavithai exposed all the feel like poverty, love etc,, so keep writing and my wishes for ur writing to be read by everyone. Because creative writing deserves what it has to... all the best kalyanjee. keep rocking..

Unknown said...

hi kalyanje, ur writintgs are simply awesome, ur kavithai exposed all the feel like poverty, love etc,, so keep writing and my wishes for ur writing to be read by everyone. Because creative writing deserves what it has to... all the best kalyanjee. keep rocking..

தமிழச்சி said...

பத்திரிக்கை ஆசிரியர் என்கிறீர்கள்! நீங்களுமா பாழாய்போன திரைப்படத்துறையைப் பற்றி வலைதளத்தில் எழுதிக் கொண்டிருப்பது? நம் நாட்டில் எவ்வளவோ அவலங்கள், சீரழிந்த நிகழ்வுகள் அதுபற்றிய கருத்துக்களையும் எழுதலாமே!

இது என்னுடைய ஆதங்கம் மட்டும் தான். நீங்கள் ஒரு பத்திரிக்கை ஆசிரியாராக இருந்தவர் என்று அறிமுகப்படுத்தியதால் தான் இந்த விமர்சனமும், இல்லாவிட்டால் உங்களுடைய கருத்து எதை வேண்டுமானாலும் எழுதலாம். வலைதளத்தில் எல்லாவற்றிலும் சுதந்திரம் உண்டு.


நட்புடன்...
தமிழச்சி

சிவசுப்பிரமணியன் said...

அருமையான அறிமுகம் கல்யாண்... சுஜாதா சொன்ன இந்தகவிதை படித்திருக்கிறேன்.. ஹ்ம்ம் நீங்க தானா அது.. எப்பத்தான் எழுதிறீங்களோ.. என்னுடைய வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி