Wednesday, April 23, 2008

கோயிலில் யானைகள் தேவையா?

இன்று ஏப்ரல் 23ல் திருச்சூரில் இருந்த கோயில் யானை மதம் பிடித்து மூன்று உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. இதற்குமுன்னரும் கேரளாவில் இது நடந்திருக்கிறது. யானைகளின் பராமரிப்பு சரியில்லாததே இதற்குக் காரணம்.
இப்படி மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத யானைகளை கோயில்களில் வைத்துக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம். இதற்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறீர்கள்? பாவம் அதை தினமும் குளிப்பாட்டி, உணவூட்டி, கூடவேயிருந்த பாகனையும் அடித்து மிதித்துக் கொன்றிருக்கிறது அந்த யானை. இது தேவையா? யோசிப்போம். யானைகளுக்கு கோயில்களிலிருந்து விடுதலையளித்து மனித உயிர்களைக் காப்போம்.

4 comments:

பிரேம்ஜி said...

வணக்கம் கல்யாண்ஜி. இது மிக நல்ல கருத்து. இது மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த ஜீவன்களையும் கொடுமை படுத்தி மக்களும் பலியாகி.. ஹ்ம்ம் எப்போது திருந்துவார்களோ?

கல்யாண்குமார் said...

நன்றி பிரேம்ஜி தங்கள் கருத்துக்கு.

துளசி கோபால் said...

இன்னிக்கு நம்ம வீட்டுலே பேச்சு இது பற்றித்தான். கோவில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்துவதை ஒட்டுமொத்தமாக நிறுத்தணும். அதிலும் பூரம் விழா போன்றவைகளில் முப்பது யானைகள். அந்தச் செண்டைச் சத்தம்( மன்னிக்கணும். அந்த இசையை ஒருவர் வாசிச்சுக்கேட்டால்தான் இனிமை. போட்டிப்போட்டுக்கிட்டு கூட்டமா வாசிக்கும்போது இரைச்சல், கூடி இருக்கும் லட்சக் கணக்கான மனிதர்கள் போடும் பேச்சுச் சத்தம், போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு வெடிக்கட்டு என்ற பேரில் வெடிச்சத்தம் எல்லாம் சேர்ந்து இருந்தால் யானை மட்டுமா மிரளும்?

வேகாத வெயிலில், அன்னம் ஆகாரமில்லாமத் தாகத்தோடு காலையிலிருந்து நின்னு பாருங்க. அதுகள் படும் வேதனை புரியும்.

இதை நிறுத்தச் சொன்னால் பாரம்பரியமே கெட்டுப்போச்சுன்னு 'லபோதிபோ'ன்னு கூச்சல் போடுவாங்க. அந்தக் காலத்தில் சின்ன அளவில் ஆரம்பிச்ச உற்சவங்கள் இப்போப் பெருகி வீங்கி வெடிக்கும் கூட்டத்தினால், நடத்துபவர்களின் வீண் கெளரவங்களால் அனாவசிய செலவுகளுடன் மென்னியைப்பிடிக்கறதுமல்லாமல், இப்படி மிருகவதையிலும் கொண்டுபோய் விட்டுருக்கு.

இதேதான் பக்ரீத் சமயத்தில் ஒட்டகங்கள் நிலையும். சொன்னால் மத விரோதியாக்கப்படுவோம்.

மக்கள் சிந்திக்கவே மாட்டோமுன்ன எப்படி?

நீண்டுபோன பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்.

துளசி (நியூஸியில் இருந்து)

சொல்ல மறந்துட்டேனே....

வலை உலகில் வந்தமைக்கு வாழ்த்து(க்)கள்.

சிவசுப்பிரமணியன் said...

ஆரம்ப நாட்களில் இருந்தே வரும் பழக்கம் இது.. அதுவும் கேரளத்தில் இந்த பழக்கத்தை விட மாட்டார்கள் என்பது திண்ணம்.. கொஞ்சம் கவனத்துடன் பார்த்து கொண்டால் எதுவும் ஆகாது என்பது என் எண்ணம்